சறுக்கியது நயன்தாராவின் ஐரா !!!

6 கோடி நஷ்டம்

நடிகை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து வெளிவந்த ஐரா படத்திற்கு பெரிய வரவேற்ப்பு கிடைக்காத நிலையில், திரைப்படம் வினிஜோகஸ்தர்களுக்கு நட்டத்தை கொடுத்துள்ளது.

11.50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மொத்தமாக 15 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு லாபம் தான் என்றாலும், வாங்கிய வினியோகஸ்தர்கள் அதிகம் நஷ்டம் அடைந்த்துள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன.

10 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு இதுவரை 4 கோடி தான் ஷேர் கிடைத்துள்ளதாம். இதனால் அவர்களுக்கு 6 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.