புதிய வரலாற்று படத்துக்காக உடல் எடையை குறைத்த தமிழ் நடிகர்

என்றென்றும் புன்னகை, ரிச்சி போன்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் எஸ்.காளிங்கன் இயக்கும் புதிய வரலாற்று படத்தில் நாயகனாக ஆரி, ஜோடியாக ஐதராபாத்தை சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு கதாநாயகன் ஆரி தனது உடல் எடையை 10 கிலோ குறைத்து இருக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சி.வி.மஞ்சுநாதன் திரைப்படம் பற்றி குறிப்பிடுகையில் கூறுகையில், “இது, ஹாலிவுட் பாணியில் தயாராகி வரும் படம். கதையை டைரக்டர் சொன்னதுமே படத்தை தயாரிப்பது என்று முடிவு செய்து விட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Actor Aari

Tamil actor who lost weight for new historical film

Related Posts