தான் நடிக்க மறுத்த திரைப்படத்தின் வெற்றிவிழாவுக்கு வந்து வெற்றிபெற்றவர்களை வாழ்த்திய விஜய்

நடிகர் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய வெற்றி திரைப்படம் சண்டக்கோழி . இத்திரைப்படத்தில் முதலில் சூர்யாவை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அது முடியாமல் போனதால் நடிகர் விஜயிடம் கதை சொன்னதாகவும் தெரிவித்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

மேலும் இதுகுறித்து மனோ பாலவுடன் அவரது யூட்யூப் சேனலுக்கு வழங்கிய செவ்வியில் முதல் பாதி கதையை மட்டும் கேட்ட நடிகர் விஜய், இந்தப் படத்தில் நடிக்க தனக்கு உடன்பாடில்லை என கூறி இரண்டாம் பாதி கதையை கேட்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் பாதியை விடவும் இரண்டாவது பாதியில் அப்பா கேரக்டருக்குதான் அதிக முக்கியத்துவம் உள்ளது என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் சண்டக்கோழி படத்தில் விஷால் நடித்தார். ஆனால் படம் 225 நாள் ஓடி சாதனை படைத்தது.

ஆனால் இந்த படத்தின் வெற்றி விழாவிற்கு வந்திருந்த விஜய் இயக்குனர் லிங்குசாமிக்கு கை கொடுத்து வேற லெவல்ல படத்தை கொண்டு போய் விட்டீர்கள் சார், சூப்பர் என்று பாராட்டியுள்ளார். மேலும் அதற்கு நான் நீங்கள் தான் வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களே என்று இயக்குனர் சொல்ல, அதற்கு விஷால் நடித்தால் மட்டும் தான் சரியாக இருக்கும் என விஜய் தெரிவித்தார் என கூறியிருக்கிறார் லிங்குசாமி.

actor vijay refuse to act in sandakoli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *