சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் விவேக்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் ஹீரோ படத்தில் நடிகர் விவேக்கும் இனணந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர , அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.

இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் அர்ஜூன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இத்திரைப்படத்தில் நடிக்க காமெடி நடிகர் விவேக் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன்முலம் முதல்முறையாக சிவகார்த்திகேயன் – விவேக் கூட்டணி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts