காப்பான் படத்தில் படத்தில் இணையும் நடிகை பூர்ணா

Poorna – Shamna Kasim

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘காப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது இன்னொரு பிரபல நடிகை பூர்ணவும் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் ஏற்கனவே சூர்யாவுடன் ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி, மோகன்லால், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகை பூர்ணா இனனிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இவரும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக நடித்துள்ளதாக தற்போது கோடம்பாக்க செய்த்திகள் கூறுகின்றன.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா மற்றும் சமுத்திரக்கனி அவருடைய பாதுகாவலர்களாகவும் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் , சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படம் வரும் ஏப்ரலிலும், காப்பான் ஆகஸ்ட் மாதத்திலும் வெளியாகவுள்ளது.

Actress Purna Also Joins With Kaappaan