மீண்டும் ஹரியுடன் இணையும் சிம்பு???

சமீபகாலமாக தொடர்ந்து சிம்பு பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், சிம்பு ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க விரும்பியதால் கமர்ஷியல் பட இயக்குனர் ஹரியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மிகவிரைவில் அதுகுறித்த அறிவிப்புக்கள் வெளிவரும் எனவும் கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

தற்போது சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, அடுத்து கௌதம் கார்த்திக்குடன் ‘முப்ஃடி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக், தொடர்ந்து ஐக் இயக்கத்தில் எம்.ஆர்.ராதா பயோபிக்கில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.