பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

பாண்டிராஜ் – சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில், இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் , அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படம், அதனை அடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகத் தற்போது தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.