ஷூட்டிங் ஸ்பாட்டில் “தல” இக்கு கதை சொன்ன வில்லன்

Nerkonda Paarvai

தல அஜித் தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வரும் நிலையில், படத்தில் வில்லனாக நடித்து வரும் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திடம் ஒரு கதையை சுருக்கமாக கூறியுள்ளார்.

தல அஜித்துக்கு அந்த கதை பிடித்து போக, அஜித் உடனே, “கதை நல்லா இருக்கு. டெவலப் செய்யுங்கள்” என பதில் அளித்துள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்கிற கேள்வி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts