‘தல 60’ இல் அஜித் நடிக்கும் கேரக்டர் கசிந்தது???

‘தல 60’ இல் அஜித் நடிக்கும் கேரக்டர் கசிந்தது???

‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘தல 60’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் எச்.வினோத் இயக்கவுள்ள ‘தல 60’ திரைப்படத்தில் அஜித் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக அவர் இன்னும் ஸ்லிம் ஆக பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளியான குற்றலீஸ்வரனுடன் அஜித் இருந்த புகைப்படம் பெப்பர் சால்ட் தோற்றத்திற்கு விடை கொடுத்த அஜித், கருமையான முடியுடன் மீசை, தாடியின்றி இருந்தது அஜித் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

அஜித் ஏற்கனவே ‘என்னை அறிந்தால்’, ‘மங்காத்தா’, ஆஞ்சநேயா’ உள்பட படங்களில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ajith Role In Thala 60 Leaked