ஊருக்கு உபதேசம் தனக்கில்லை – நடிகர் அக்‌ஷய் குமார்

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார், வாக்களிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த நிலையில் , அவரது ஓட்டை அவர் போடாதது கடும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 29-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அப்போது பல நட்சத்திரங்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.

ஆனால் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வாக்களிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடியிடம் அரசியல் சாராத கேள்விகளை கேட்டு பேட்டி கண்டார். ஓட்டுப்போடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஓட்டுரிமையின் மகத்துவம் குறித்து வாக்காளர்களிடம் அக்‌ஷய் குமார் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது தவிர
கேசரி, டாய்லட் ஏக் பிரேம் கதா, ஏர்லிப்ட் போன்ற படங்களில் அவர் தேசியவாதத்தை வலியுறுத்தும் வகையில் நடித்து இருந்தார்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக கடமையாற்றாமல் புறக்கணிப்பு செய்த அவரை வலைத்தள நெட்டிசன்கள் கேள்வி வசைபாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ‘பிளாங்’ திரைப்பட சிறப்பு காட்சியின் போது, ஓட்டுப்போடாதது குறித்து அவரிடம் நிருபர்கள் சரமாரி கேள்வி கேட்க அதற்கு பதில் எதுவும் அளிக்காமல் அவர் வேக வேகமாக சென்று விட்டார். அனைவரும் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர் ஒருவர் ஜனநாயக கடமையாற்றாதது “ஊருக்கு உபதேசம் தனக்கில்லை” என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

ஊருக்கு உபதேசம் தனக்கில்லை – நடிகர் அக்‌ஷய் குமார்

Related Posts