பொன்னியின் செல்வனில் இணையும் அமலாபால்

Ponniyin Selvan

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

இதுதவிர கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

நயன்தாரா, அனுஷ்காவுடனும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதனை முடிவுகள் எட்டப்படாதநிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனானவும், ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts