விரைவில் அரண்மனை 3

காஞ்சனா 3 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து , சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்றாவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார்.

வெற்றி பெறும் படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது டிரெண்டாகவே மாறிவிட்டது. ஆனால் அப்படி எடுக்கப்படும் படங்களில் பெரும்பாலான படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு போதிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைப்பதில்லை.

லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் வசூல் குவித்ததால் அதன் மூன்றாம் பாகம் இப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதனால் சற்று உற்சகமான சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார்.

இதற்காக நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. அரண்மனை 2-ம் பாகத்தில் நடித்த திரிஷா, ஹன்சிகா ஆகியோர் 3-ம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று கோடம்பாக்கத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.