அப்படியே காப்பியடித்து ரீமேக் செய்தவற்குப் பதிலாக ‘அசுரன்’ படத்தையே தெலுங்கில் டப்பிங் செய்யலாம் – கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.

இந்நிலையில் ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நரப்பா’ திரைப்படத்தில் நடிகர் வெங்கடேஷ் நடித்துவருகிறார்.

இந்நிலையில் வெளிவந்திருக்கும் ‘நரப்பா’ போஸ்டர்கள் அப்படியே ‘அசுரன்’ போஸ்டர்களைப் போலவே வெளிவந்துள்ளது.

தமிழில் தனுஷ் அணிந்திருந்த முக்கால் வேஷ்டி, நீளமான காக்கி கலர் சட்டை, தலையில் சுற்றப்பட்ட பச்சை கலர் துண்டு, கனமான மீசை, நெற்றியில் விபூதி, கருப்பு பொட்டு, கரை படிந்த பற்கள் என ‘அசுரன்’ஐப் பார்த்துப் பார்த்து ‘நரப்பா’வை உருவாக்கியுள்ளனர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் எந்த மாற்றமும் இல்லாமல், அப்படியே காப்பியடித்து ரீமேக் செய்தவற்குப் பதிலாக ‘அசுரன்’ படத்தையே தெலுங்கில் டப்பிங் செய்யலாம் என விமர்சித்து வருகின்றனர்.

Asuran in Teleungu As Narappa
Asuran in Teleungu As Narappa

Asuran in Teleungu As Narappa