கூகிளில் ஆதிக்கம் செலுத்தும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

Avengers Endgame

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்திவருகிறது.

எண்ட்கேம் திரைப்படம் வெளியானதில் இருந்து இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதிய மார்வெல் திரைப்படம் பற்றிய தேடல்களில் அவெஞ்சர்ஸ் அபிமானிகள் தீவிரமாக உள்ளனர்.
இதனால் இவர்களை குஷிப்படுத்த முடிவு செய்துள்ள கூகுள் , அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வில்லன் கதாபாத்திரமான தானோஸ்-ஐ கூகுளில் ‘Thanos’ என டைப் செய்து தேடுபவர்களுக்கு திரையின் வலதுபுறம் இடதுபக்கத்தில் தோன்றும் நவரத்தின கற்களை க்ளிக் செய்ய, தானோஸ் கையுறை தானாக விரல்களை மடித்துக் கொண்டு சொடக்கு போடும். பின் கூகுள் தேடல் பக்கத்தில் தோன்றிய பதில்கள் மேலும், கீழுமாக ஒவ்வொன்றாக காற்றில் மறைந்து போகிறது. மீண்டும் தானோஸ் கையில் இருக்கும் நட்சத்திர கற்களை க்ளிக் செய்ததும் மறைந்து போனவை திரையில் தோன்றுகிறது.

தானோஸ் கதாபாத்திரம் திரைப்படத்தில் செய்த நடவடிக்கைகள் கூகுள் தேடலில் அப்படியே பிரதிபலிப்பது அவெஞ்சர்ஸ் ப்ரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது.

Avengers Endgame Thanos
Avengers Endgame Thanos