மெகா ஹிட் திரைப்படத்தின் ரீமேக்கில் இணைந்து நடிக்கப்போவது சூர்யா-கார்த்தியா? இல்லை சசிகுமார் – ஆர்யாவா?

சமீபத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம் திரைக்கு வந்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுவருகிறது. இத்திரைப்படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருக்கும் இத்திரைப்படத்தின் தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருக்கிறார். தொடர்ந்து இப்படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடாத்திவருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் சசிகுமார், ஆர்யா ஆகியோர் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், தற்போது அந்த படத்தில் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல் உறுதியானால், சூர்யா-கார்த்தி இணைந்து நடிக்கும் முதல் முழுநீள படம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Ayyappanum Koshiyum Tamil Remake

Ayyappanum Koshiyum Tamil Remake

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *