ஏன் உங்களுக்கு நான் அக்கா தங்கச்சி மாதிரியில்லையா?

பிக் பாஸ் ஜூலி உருக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஜூலிஐ , மக்கள் முன் வேறு ஒரு ஜூலியாக மாற்றிவிட்டது பிரபல தொலைக்காட்சி.
பல நிகழ்ச்சிகளில் பீப் போட்டு, தமிழர் கலாச்சாரத்திக்கு ஒவ்வாத பல நிகழச்சிகளை நடத்திவரும் அந்த பிரபல நிறுவனம் ஜூலியின் ஜல்லிக்கட்டு போராட்டத்தையே மழுங்கடித்துவிட்டது.

இந்நிலையில் ஜூலி தற்போது உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “செத்துடு, ஏன் உயிரோட இருக்க? என கேட்கிறீர்கள். என்னால் உங்களுக்கு எதாவது நஷ்டம் ஏற்பட்டதா? இல்லை உங்களை ஏமாற்றிவிட்டேனா? ஏன் இப்படி கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறீர்கள்” என ஜூலி கேட்டுள்ளார்.

பிக் பாஸ் மூலம் நல்ல படியாக பிரபலமான சமூக அக்கறையுள்ள நடிகையின் திரைப்படம் 90Ml என்கிற கருத்துள்ள , முன்மாதிரியாக கொள்ள கூடிய வகையில் அண்மையில் வெளியாகியிருந்தமையும், அந்த நிகழ்வுகளை குறிப்பிட்ட தொலைக்காட்ச்சிகள் விளம்பரப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.