Tamil Cine Koothu
News

விஜய் ராயப்பனாக நடிக்க முன்மாதிரியாக திகழ்ந்த சுஷாந்த் சிங் – அர்ச்சனா கல்பாத்தி

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் அவர்குறித்த பல தகவல்களை வெளியிட்டுவருகின்றனர்.

அந்தவகையில் கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற ராயப்பன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதற்கு சுஷாந்த் தான் காரணம் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் “’பிகில்’ படத்தின் ‘ராயப்பன்’ கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் தேர்வு செய்யப்படவில்லை என்றும், அப்போது மும்பையில் இருந்து வந்திருந்த ஒப்பனை கலைஞர் ஒருவர் சுஷாந்த் சிங் நடித்து வரும் சிச்சோரே என்ற படத்தில் அவருடைய இரண்டு கதாபாத்திரம் குறித்த புகைப்படங்களை காண்பித்தார். அந்த புகைப்படங்களை பார்த்த பின்னர் தான் ராயப்பன் கதாபாத்திரத்திலும் ஏன் விஜய் நடிக்கக்கூடாது என்ற யோசனை எனக்கும் அட்லீக்கும் வந்தது.’ என தெரிவித்துள்ளார்.

பீகிள் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கக்து.

Related posts

வைரலாகும் டாப்சியின் கவர்ச்சி போட்டோஷூட் படங்கள்

Rasikan

விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை – வைரல் வீடியோ

Rasikan

மாஸ்டர் படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் – இசை வேலைகளில் இணைந்த முக்கிய இசைக்கலைஞ்சர்

Rasikan