சீனாவிலும் வெளியாகிறது ‘பிகில்’ – ஏஜிஎஸ் நிறுவனம் உறுதி

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்தைச் சீனாவிலும் வெளியிட, ஏஜிஎஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தணிக்கை குழுவின் இறுதி அறிக்கைக்காக காத்திருக்கும் பிகில் குழு, இதர மொழிகளுக்கான ட்ரெய்லர் வெளியீட்டுப் பணிகளை செய்து வருகிறது. மேலும் கிடைத்தத தகவல்களின்படி பிகில் படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் ‘பிகில்’ படத்தைச் சீனாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அர்ச்சனா கல்பாத்தி “இன்னும் சில மாதங்களில் ‘பிகில்’ திரைப்படத்தைச் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். ‘பிகில்’ படத்தைச் சீனாவுக்கு எடுத்துச் செல்வதுதான் எங்கள் அடுத்த பெரிய இலக்கு” என தெரிவித்துள்ளார்.

Bigil

Bigil Will Be Released In China Also – Producer

Related Posts