தளபதி 63 படத்தில் பாலிவுட் நடிகர்

Thalapathy 63

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருக்கிறார்.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தில் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருப்பது திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது.

ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதி, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு, இசை ஏ.ஆர்.ரகுமான் என ஒரு நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.