புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

வெளியேறிய போட்டியாளர் போல் இமிடேட் செய்த சேரன் – கொதிக்கும் இணையவாசிகள்

Bigg Boss Tamil 3

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் வீட்டின் நேற்றைய நிகழ்வுகளின் ஒருபகுதியில், டோர் எண்ட்ரி அருகே சாண்டி, சேரன் மற்றும் முகேன் அமர்ந்திருந்தினர். அவர்களுக்கு சற்று தொலைவில் கஸ்தூரி தியானம் செய்து கொண்டிருந்தார்.

இதை பார்த்த சாண்டி, கஸ்தூரியை பார்த்தால் மீராவை பார்ப்பது போலவே உள்ளது என கூற, உடனே அருகில் இருந்த சேரன் மீரா பிக்பாஸ் வீட்டில் பேசுவதை எமிட் செய்யும் விதத்தில் பேசி காட்டினார்.

பிக்பாஸ் வீட்டில் சாண்டி மற்றவர்கள் குறித்து காமெடி பண்ணும் போது – குறிப்பாக சேரன் குறித்து காமெடி பண்ணும் போது சாண்டியை அழைத்து தான் மற்றவர்கள் போல் இல்லை எனவும், அதனால் தனக்கு ஹவுஸ்மேட்ஸ் தகுந்த மரியாதை கொடுக்க வேண்டும் என கூறிய சேரன், ஒருவர் வெளியேறிய பின்பு அவரை போல நடித்து காட்டுவது எவ்விதத்தில் சரி என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்டுவருகின்றனர்.

Video

Cheran Imitated As Evicted Candidate