ஒரே நாளில் சந்தானத்தின் 2 படங்கள்

நகைசுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி இருக்கும் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கியுள்ள ‘டகால்டி’, மற்றும் ஆனந்த் பால்கி இயக்கியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய திரைப்படங்களே வருகிற ஜனவரி 31ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘டகால்டி’ திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் மற்றும் யோகிபாபு, ராதாரவி, சந்தான பாரதி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா மற்றும் பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

Server Sundaram
Dagaalty

Dagaalty and Server Sundaram will be released on jan 31st