தினம் ஒரு புகைப்படம் லீக் – திணறுகிறது தர்பார் படக்குழு

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தொடர்ந்து லீக் ஆகி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்துவரும் தர்பார் படப்பிடிப்புகளை தமிழகத்தில் நடத்தினால் ரசிகர்கள் அன்பு தொல்லைகள், கதாபாத்திரங்களின் தோற்றங்களை செல்போனில் படம்பிடித்து வெளியிடுவதை தடுக்கவும் வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளனர் படப்பிடிப்பு குழுவினர். ஆனால் அங்கேயும் கேமராவுடன் ரசிகர்கள் திரள்கிறார்கள்.

‘தர்பார்’ படத்துக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தார். படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின் தோற்றங்களை ரகசியமாக படம்பிடித்து இணையதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

ரஜினிகாந்தும் யோகிபாபுவும் நடித்த காட்சி, ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வரும் காட்சிகள் என தொடர்ந்து இணையதளங்களில் காட்சிகள் தொடர்ந்து வந்தவண்ணமுள்ளன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த பல பிரயத்தனங்களை எடுத்தும் இதுவரை பலனளிக்காததால் , திரைப்பட குழு திணறி வருகிறது.