நடப்பு அரசியலை கிண்டலடித்த தர்மபிரபு டீசர்

அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா

யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்மபிரபு’ படத்தின் டீசரில் அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா என்ற அரசியல் சாட்டை வசனங்களுடன் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

முத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதாரவி, `வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இதில், யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார்.

இந்நிலையில், இன்று இத்திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இதில் ‘இங்கு எல்லோரும் தகுதியுடன் தான் இருக்கிறார்களா?, அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா என்ற வசனம் அதிமுக, திமுக, பாமக வை சாடியுள்ளதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடப்பு அரசியலை கிண்டலடித்த தர்மபிரபு டீசர்