கர்ப்பிணி யானையை கொன்றவனுக்கு பிரபல இயக்குனர் கொடுக்க நினைக்கும் தண்டனை, இருந்தும் கோபம் தீரவில்லை

சமீபத்தில் அன்னாசி பலத்தை யானை உண்டபோது அதன் வாயில் வெடி வெடித்தது. வலியால் துடித்த அந்த யானை, பின்னர் சில மணி நேரங்களில் தண்ணீரில் நின்றபடி தனது உயிரை மாய்த்துவிட்டது. யானை நீரில் நின்றபடி இருந்த புகைப்படம் காண்பவர்களை கண்கலங்க வைப்பதாக இருந்தது. நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்துக்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்ப்பிணி யானையை கொன்றவனுக்கு பிரபல இயக்குனர் லிங்குசாமி இவ்வாறு தண்டனை கொடுக்க விரும்புகிறார், இருந்தும் அவர் மனம் சாந்தியடையவில்லை.

கடைசியில் அவனை கண்டறிந்த பிறகு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற பல யோசனைகளுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன்

ஒரு தந்தம் கொண்டு நடு முதுகில் யானை பலம் கொண்டு இறக்கினேன்

இன்னொரு தந்தம் கொண்டு கீழ்வழியாக மேல் நோக்கி ஏற்றினேன்

அப்போதும் தீர்ந்த பாடில்லை கோபம்

ஏனெனில் அவன் கர்ப்பம் தரித்திருக்கவில்லை’

என பதிவிட்டுள்ளார்.

Lingusamy

elephant lives matter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *