நள்ளிரவில் விஜய், நயன்தாராவை காண குவிந்த ரசிகர்கள்

வடசென்னையில் தளபதி 63 படப்பிடிப்பு

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு வடசென்னையில் நடந்து வரும் நிலையில், விஜய், நயன்தாராவை காண சமீபத்தில் ரசிகர்கள் இரவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் ஜோடியாக நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ரசிகர்கள் பெருமளவில் கூடுகிறார்கள்.

தற்போது இதன் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள்.

அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார். இந்த வீடியோவும் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/BvLord6Aqd1/ https://www.instagram.com/p/BvLlVLgAjNz/
https://www.youtube.com/watch?v=VPhCgY1bWsw