உடற்பயிற்சியில் ஈடுபட்ட சூர்யாவிற்கு காயம் ? – குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டு தற்போது குணமடைந்து வருவதாக கோடம்பாக்க செய்திகள் வெளியாகி உள்ளது.

ஒரு சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளாகவும், அதிலிருந்து அவர் மீண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து நடிகர் சூர்யா விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் #GetWellSoonSuriyaAnna என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

சூர்யா, சுதா கொங்காரா இயக்கத்தில் இவர் நடித்துள்ள சூரரைப்போற்று படம் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்க்கது.

Get Well Soon Suriya Anna

Get Well Soon Suriya Anna

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *