கண்ணே கலைமானே திரையரங்கில் நடனம் ஆடிய பெண்கள்

சீனுராமசாமியின் கண்ணே கலைமானே வெளியாகி இருக்கும் திரையரங்கு ஒன்றில் சில பெண்கள் சாமியாட்டம் போட்டுள்ளனர்.

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் மதுரை, சோழவந்தான் என்ற ஊரில் உள்ள திரையரங்கில் கண்ணே கலைமானே திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த சில பெண்கள் திரையில் வரும் காட்சியை கண்டு சாமியாட்டம் போட்டுள்ளனர்.

இந்த வீடியோவை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கண்ணே கலைமானே திரையரங்கில் நடனம் ஆடிய பெண்கள்