மோடியை கிண்டல் செய்ததா வாட்ச்மேன் படக்குழு !!!

Chowkidar

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படக்குழு சமீபத்தில் வெளியிட்ட போஸ்டரில் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை கிண்டல் செய்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் பரவி வருகின்றன.

அண்மையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் காவலாளி நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். அதனை தொடர்ந்து “நானும் காவலாளிதான்” என்ற சொல் டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது.

இந்நிலையில் பா.ஜனதா தலைவர்களின் இந்த செயலை கிண்டல் செய்யும் வகையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டரில் நாய் ‘நானும் காவலாளிதான்’ என்று சொல்வது போல் வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ச்மேன் என்ற அந்த படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அந்த நாயும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறது. படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த போஸ்டருக்கு பா.ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.