மதுமிதா பிக் பாஸ் விதிமுறைகளை மீறுகிறார் – சாக்க்ஷி

கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சர்ச்சைக்குரிய தற்கொலை முயற்சியால் வெளியேற்றப்பட்ட மதுமிதா, தனக்குரிய சம்பளத்தை விஜய் டிவி நிர்வாகம் உடனே தரவேண்டும் என்று மிரட்டியதாக விஜய் டிவி நிர்வாகம் போலீஸ் புகார் அளித்திருந்தது ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் இது குறித்து ஊடகம் ஒன்றிக்கு தகவல் வழங்கிய வெளியேறியுள்ள சக போட்டியாளர்களின் ஒருவரான சாக்க்ஷி, “மதுமிதா சம்பளம் கேட்பது காண்ட்ராக்ட் விதிமுறைக்கு முரணானது” என தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
“மதுமிதா செய்த செயல் மிகவும் தவறு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் காண்ட்ராக்டில் கையொப்பமிடும் போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறி 100 நாட்களுக்கு பின்னர்தான் ஊதியம் வழங்கப்படும் என்று தெளிவாக தெரியப்படுத்தி இருந்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மதுமிதாவின் ஒப்பந்தத்தில் அதை தவிர்த்து வேறேதும் இருந்ததா என தனக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Video

From 1.10 Sec

Jangiri Madhumitha Violates Big Boss Agreements