புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகைகள் கொள்ளை

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் இமான் அண்ணாச்சி. தொலைக்காட்சியில் பிரபலமாகி அதன்மூலம் சினிமாவுக்கு வந்தவர்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் நடிகர் இமான் அண்ணாச்சி வசித்து வரும் நிலையில் நேற்றிரவு அவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை மற்றும் ரூ.10000 ரொக்கம் கொள்ளை போனதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து இமான் அண்ணாச்சி தரப்பில் தரப்பட்ட புகாரை அடுத்து கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.