ராட்சசியாக மாறும் ஜோதிகா

எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு `ராட்சசி’ என தலைப்பு வைத்துள்ளதாக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காற்றின் மொழி' வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து, அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகா ஆசிரியராக வரும் இந்த படத்திற்குராட்சசி’ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

Related Posts