‘கைதி’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளி விருந்தாக விஜயின் பிகிலுடன் மல்லுக்கட்டிய திரைப்படம் கைதி.

இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

இதனையடுத்து இத்திரைப்படத்தை மற்றைய மொழிகளிலும் எடுக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

கைதி படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பாலிவுட்டில் கடும் போட்டா போட்டி நிலவி வந்த நிலையில், ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜை தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து அஜய் தேவ்கன் சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அஜய் தேவ்கன் தானே நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ajay Devgn

Kaithi Hindi Remake

Related Posts