பள்ளிக்கூடம் கட்டி கொடுத்த காஜல் அகர்வால்

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்கபள்ளிக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த காஜல் அகர்வால்,
“சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். அதற்கு என் பணத்தையே செலவிடுகிறேன். ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதை பார்த்தேன். இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வரையுள்ளமை குறிப்பிடத்தக்கது.