காஞ்சனா 3 வை ஓரம் கட்டும் அவென்ஜர்ஸ்!

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தால் காஞ்சனா 3 படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான 4-வது படம் காஞ்சனா 3.
இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. தெலுங்கில் ஒரே வாரத்தில் ரூ 14 கோடி வசூல் குவித்தது. தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் 12 கோடி ரூபாயை கல்லாக் கட்டி முதல் வார முடிவில் 60 கோடி ரூபாயைத் தாண்டி உலகம் முழுவதும் முதல் வார முடிவில் 100 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கோடைவிடுமுறை நாட்கள் என்பதால் இன்னும் கலெக்‌ஷன் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டவேளையில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கடந்த வாரம் திரைக்கு வந்து காஞ்சனா 3 படத்தின் வசூலை சூருட்டிவிட்டது..

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்து வரும் நிலையில், இத்திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. இதனால், காஞ்சனா 3 படத்தின் வசூல் பாதிக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.