தொடங்கியது கார்த்தியின் K19

K19

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி – ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகும் K19 இன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக உருவாகும் இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு, பொன்னம்பலம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து வரும் கார்த்தியின் அடுத்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.