பூஜையுடன் தொடங்கியது கார்த்தியின் அடுத்த படம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி – ஜோதிகா – சத்யராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோவாவில் தொடங்கியுள்ளது.

பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கும் இந்த படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாபாத்திரத்தில் நடிக்க, அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் தொடங்கியது.

இத்திரைப்படத்தில் நடிப்பது குறித்து கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல் முறையாக அண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சத்யராஜ் இந்த படத்தில் சேர்ந்து இருப்பது மிகப்பெரிய பலம். அனைவரின் ஆசிர்வாதத்துடன் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.