திரிசூலத்துக்கு பதில் தரை துடைக்கும் மாப் – சர்ச்சையை கிளப்பும் விஜய் டிவி ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சி வழங்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு.

இவ்நிகழ்ச்சியின் இந்தவாரத்துக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டு ரசிகர்களால் பார்வையிடப்பட்டுவருகிறது.

பலரும் இந்து சமயம் சார்ந்தவர்களின் சமய அனுட்டானங்களை கிண்டலடித்து வரும் நிலையில், விஜய் டிவியும் இந்த சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், நித்தியானந்தாவை கிண்டல் செய்வது போன்ற காட்சிகளில் பங்கெடுப்பாளர் யோகி , நித்தியானந்தா வைத்திருக்கும் திரிசூலத்துக்கு பதிலாக தரை துடைக்கும் மாப் ஒன்றை வைத்திருப்பது இந்து கடவுள்களை கொச்சை படுத்துவது போல் உள்ளதாக ரசிகர்களால் குற்றம் சாட்டப்பட்டுவருகிறது. நகைசுவை என்பதை தாண்டி நாடு சந்தித்துவரும் முரண்பாடுகளில் சமூக பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நித்தியானந்தாவை கிண்டலடிப்பது வேறு, ஒரு மதத்தின் அடையாளங்களை கிண்டலடிப்பது வேறு என குற்றம் சாட்டிவருகிறனர்.

இதோ அந்த ப்ரோமோ…..

KPY Champions Season 2 , 12th January 2020 – Promo 3 issue