சிம்புவுக்கு முன்பே குறளரசனுக்கு டும் டும் டும்

நடிகர் சிம்பு நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், அவரது தம்பி குறளரசன், சிம்புவுக்கு முன்பாக வரும் சித்திரையில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கோடம்பாக்க செய்த்திகள் தெரிவிக்கின்றன.

குரளரசன் இஸ்லாமிய பெண் ஒருரை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், தனது பெற்றோர் சம்மதத்துடன் அவர் சமீபத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இதுகுறித்து ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்துள்ள குரளரசன்,

ஏப்ரல் 26-ல் எனக்கு திருமணம் என்பதில் உண்மையில்லை. ஆனால் நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். எனது திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். அண்ணன் சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்வது பற்றி கேட்டதற்கு, புன்முறுவலுடன் பதிலளித்த குறளரசன், எனக்கு திருமணம் நடந்து முடிந்தால், அடுத்து அனைவரது கவனமும் சிம்புவின் பக்கம் திரும்பும். எனவே திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து அவருக்கு வேறு வழி இருக்காது. என்று கூறியுள்ளார்.

Related Posts