பிரபல நடிகரின் படவாய்ப்பை நிராகரித்த மாளவிகா மோகனன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் நாயாகி மாளவிகா மோகனன், பிரபல தெலுங்கு நடிகரின் படவாய்ப்பை நிராகரித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’பேட்ட’ திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன், அடுத்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாளவிகா மோகனனை தெலுங்கு முன்னணி நடிகர் ரவி தேஜா திரைப்படத்தில் நடிக்கவைப்பதற்கு படக்குழுவினர் அணுகியுள்ளனர். பெரும் தொகையினை படக்குழுவினர் பேரம் பேசிய நிலையிலும் குறித்த திரைப்படத்தை மாளவிகா மோகனன் நிராகரித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மாஸ்டர் படவெளியீட்டுக்காக காத்திருக்கும் மாளவிகா மோகனன், அதனை தொடர்ந்து பல இளம் முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகளை பெறலாம் எனும் எண்ணத்தில் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Malavika Mohanan Refused Popluar Actor Movie

Malavika Mohanan Refused Popluar Actor Movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *