மாஸ்டர் திரைப்படம் குறித்து வெளிவந்த தகவல் – உண்மை நிலவரம் என்ன?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க, மக்கள் செல்வம் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

இப்படம் கடந்த மாதம் 9-ந்தேதி திரைக்கு வர இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போய் இருக்கிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் இன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அதில் இத்திரைப்படத்துக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இதனை மறுத்துள்ள படக்குழுவினர், மாஸ்டர் படத்துக்கு இன்னமும் தணிக்க சான்றிதழ் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனினும் தணிக்கை குழுவுடன் தொடர்புபட்டவர்கள் அந்த தகவல்கள் உண்மை இல்லை என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டனர். எனினும் அதுகுறித்து பரவும் புகைப்படம் போலியானது என தெரிவித்துள்ளனர்.

Master Movie Censor Certificate

Master Movie Censor Certificate

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *