முத்துக்காளை இறந்ததாக வதந்தி

முத்துக்காளை வேதனை

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம்வரும் முத்துக்காளை தான் இறந்துவிட்டதாக வதந்தி பரப்புவதாக வேதனை தெரிவித்தார்.

ஜிஜி மற்றும் கமலி நடிப்பில் நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காமெடி நடிகர் முத்துக்காளை பேசிய முத்துக்காளை “ யூடியூப் சேனல்களில் நான் இறந்துபோய் 2 வாரம் ஆகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நான் உயிரோடு தான் இருக்கிறேன்.

நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன். படப்பிடிப்புகளுக்கு செல்வதைவிட, இதுபற்றி விசாரித்து தினசரி வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நான் உயிரோடு இருக்கிறேன் என பதில் சொல்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார்.