புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது – பாரம் திரைப்படம் குறித்து மிஷ்கின் கருத்து

இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகி தேசிய விருது பெற்ற திரைப்படம் ‘பாரம்’. இப்படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வெளியிடுகிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர்கள் ராம், மிஷ்கின், வெற்றிமாறன் ஆகியோ கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் “இயக்குநர் ராம் நாம் செய்ய ஆசைப்படும் படத்தை ஒருவர் எடுத்திருக்கிறார், வந்து பாருங்கள் என அழைத்தார். ராம் சொன்னால் நல்லாருக்குமே என்று நினைத்து போய் பார்த்தால் இயக்குநரை பார்த்தவுடன் இந்தப்படம் நல்லாருக்காது என்று முடிவு செய்து விட்டேன். தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்து விட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. இந்திய சினிமாவில் முதல் மூன்று இடங்களில் இந்தப்படம் இருக்கும். அன்பை சொல்லும் படம். தமிழகத்தில் ஆறு ஏழு நகரங்களில் இந்தப்படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப்படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது. இந்தப்படத்தை பாருங்கள் உங்கள் அம்மா அப்பாவை நேசிப்பீர்கள்” என தெரிவித்துள்ளார்.

Myskkin Speech About Baaram movie