கிடப்பில் போடப்பட்ட ‘நான் ருத்ரன்’ படத்தை மீண்டும் இயக்கும் முடிவில் தனுஷ்

பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘நான் ருத்ரன்’ என பெயரிடப்பட்டிருந்த பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வந்தார்.

இத்திரைப்படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகினர்.

ஆனால் தொடர்ந்துவந்த பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்படம் அப்போது கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், தற்போது லாக்டவுன் முடிந்தவுடன் தனுஷ் அப்படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

Naan Rudran will be restart soon

Naan Rudran will be restart soon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *