‘சூப்பர் டீலக்ஸ்’ சமந்தா கதாபாத்திரம் குறித்து அதிர்ச்சியடைந்த நாக சைதன்யா

Super Deluxe

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்துள்ள சமந்தாவின் சமந்தா கதாபாத்திரம் குறித்து அறிந்த கணவர் நாக சைதன்யா அதிர்ச்சியடைந்துள்ளார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வருகிற மார்ச் 29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடம் ஏற்றிருக்கிறார். இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், நடிகை சமந்தா இதுகுறித்து கூறுகையில், “சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் சொன்னபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் ” என்றார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக தியாகராஜ குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழே கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.