மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை நயன்தாரா வருத்தம்?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்றுவருகிறது.

இந்நிலையில் தர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால், ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடிகை நயன்தாரா கடும் கோபத்தில் இருப்பதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கிறன.

தர்பார் படத்தில் நயன்தாரா ஒரு துணை நடிகையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கண்டனமும் வருத்தமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினி மகளாக வரும் நிவேதா தோமஸுக்கு அளித்திருந்த முக்கியத்தும் கூட நயன்தாராவுக்கு இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனன்ர்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவும் தனக்கு நெருங்கியவர்களிடம் இந்த வருத்தத்தை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய கஜினி படத்திலும் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற வருத்தம் இருந்துவந்த நிலையில் இப்போது மீண்டும் தர்பார் படத்தில் தனது கதாபாத்திரத்தை சிதைத்துவிட்டதாக வருத்தம் தெரிவித்து வருவதற்காக தகவல்கள் தெரிவிக்கிறன.

Nayanthara Feels About Her Role In Darbar

Nayanthara Feels About Her Role In Darbar