ஜோதிடர் சொன்னதை கேட்டு பெயரை மாற்றிய மற்றுமொரு நடிகை

‘சின்னத்திரை’ மற்றும் இரண்டாவது கதாநாயகியாக பல படங்களில் நடித்து வந்த நடிகை நீலிமாராணி, ‘கருப்பங்காட்டு வலசு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

அதற்கு முன்னதாக ஜோதிடர் ஒருவரின் அறிவுரையை ஏற்று தனது பெயரை, ‘நீலிமா இசை’ என்று மாற்றியுள்ளார்.

மேலும் ‘கருப்பங்காட்டு வலசு’ திரைப்படமானது, குற்றப்பின்னணி உள்ள திகிலான கதையம்சம் கொண்டது என்றும், பழைய பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட ஒரு கிராமத்தை ‘மாடர்ன்’ ஆக மாற்ற முயற்சிக்கும் ஒரு பெண்ணின் கதை இது என்றும் தெரிவித்துள்ளார்.

இருந்தும் தன் பெயரை மாற்றுவது மட்டும் மூட நம்பிக்கைக்குள் வராது என நடிகை நினைத்துவிட்டார் போலும்….

Neelima Rani

Neelima Rani As Neelima Isai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *