விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்!!!

நடிகை நிவேதா பெத்துராஜ் ஜெயம்ரவிக்கு ஜோடியாக டிக் டிக் டிக், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிருபிடிச்சவன் படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி, கயல் சந்திரனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், பிரபுதேவாவுக்கு ஜோடியாக பொன்மாணிக்கவேல் படத்திலும் நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் புதிதாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கோலிசோடா, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்குகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.