திருட்டு தனமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்ற நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து படம் மூலம் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். சென்று கோவில் தெப்பக்குளம் அருகில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சர்ச்சையை உருவாக்கி உள்ளன.

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிப்படுகிறார்கள். இதையும் மீறி நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் செல்போனை கொண்டு சென்று புகைப்படம் எடுத்ததை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள்.

நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதித்ததையும் விமர்சித்து வருகிறார்கள்.

இருந்தும் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், நிவேதா பெத்துராஜ் திருட்டு தனமாகவே மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு சென்றதாகவும் , இல்லை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக்கவேண்டும் எனவும் குற்றம் சாட்டப்படுகிறார்.

Related Posts