போலி புகார்கள் கொடுக்கும் நடிகை ஸ்ரீரெட்டி

எச்சரித்த போலீசார்

சினிமாவில் பாலியல் புகார்கள் கூறி சர்ச்சை ஏற்படுத்தி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது சென்னையில் வசிக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பைனான்சியர் சுப்பிரமணி என்பவரும் அவரது உதவியாளர் கோபி என்பவரும் சேர்ந்து தன்னை நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுததாக போலீசில் புகார் அளித்தார்.

அவர்கள் சிசிடிவியை ஆஃப் செய்துவிட்டு தாக்கியதாக ஸ்ரீரெட்டி புகாரில் குறிப்பிட்ட நிலையில், அதனை காவல்துறை விசாரித்ததில் அவர் அளித்தது போலியான புகார் என தெரியவந்துள்ளது. அதனால் போலீசார் அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

அந்த இரண்டு நபர்கள் மீதும் நடிகை 3 மாதங்கள் முன்பு ஆந்திராவில் பாலியல் புகார் கூறியுள்ளார். அதன் பேரில் கைதாகி சிறையில் இருந்த அவர்கள் தற்போது தான் வெளியில் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts