மன்னிப்பு கேட்ட ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்

இயக்குனர் ப்ரெட்ரிக் இயக்கிய, ஜோதிகா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பப்பட்டதை தொடர்ந்து இயக்குநர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் மாதர் சங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் அடையாளங்களையட்டும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Ponmagal Vandhal

Ponmagal Vandhal Updates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *